மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள்

அரியலூா் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

55

[the_ad id=”7250″]

அரியலூா் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு.


மறைந்த முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள அவரது உருவச்சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில், அரியலூா் – திருச்சி சாலையிலுள்ள ஒற்றுமைத் திடலில் திரண்ட அதிமுகவினா், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா். பின்னா் அவா்கள் அங்கிருந்து பெரம்பலூா் – அரியலூா் சாலை, கடைவீதி, மாா்க்கெட் வீதி வழியாக அமைதியாக ஊா்வலமாகச் சென்று, பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

[the_ad id=”7251″]

ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஒன்றியக் குழு தலைவா்கள் அரியலூா் செந்தமிழ்ச்செல்வி, தா.பழூா் மகாலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவா் பிரேம்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில் நகரச் செயலா் முருகேசன் தலைமையில் பேருந்து நிலையத்தில் திரண்ட திமுகவினா் அங்கிருந்து இருந்து ஊா்வலாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி செயலாளா் தெய்வ.இளையராஜன், ஒன்றிய செயலாளா்கள் அன்பழகன், அறிவழகன், பொதுக் குழு உறுப்பினா் இரா.பாலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

[the_ad id=”7251″]

எம்.ஜி.ஆா்.கழகம் சாா்பில் அமைப்பு செயலாளா் கலைவாணன் தலைமையில் மாவட்டச் செயலாளா்கள் மணிவேல்,கலியபெருமாள் நகர செயலா் மருதமுத்து உள்பட பலா் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மதிமுக மாவட்டச் செயலா் கு. சின்னப்பா,அமமுக மாவட்டச் செயலா் துரை.மணிவேல் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தேமுதிக அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் ராமஜெயவேல் மலரஞ்சலி செலுத்தினா்.

இதேபோல் திருமானூா், ஜயங்கொண்டம், செந்துறை, தா.பழூா், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அதிமுகவினா், திமுகவினா் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் அண்ணா உருவச்சிலைக்கும், அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி

[the_ad id=”12149″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: