police-are-searching-for-the-culprits

லஞ்ச ஒழிப்பு போலீசார்  சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

438

லஞ்ச ஒழிப்பு போலீசார்  சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை.

Anti-corruption police check.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில்  அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நேற்று அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் அலுவலகத்தின் கதவினை அடைத்து உள்புறமாக தாழ்ப்பாள் போட்டு அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தின் உள்ளே இருந்த அலுவலர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து இரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Perambalur district news, Perambalur news live, Perambalur Mavattam, Perambalur Seithigal, Today Perambalur News, Perambalur news today, Perambalur news daily, Anti-corruption, Anti-corruption police.




%d bloggers like this: