police-are-searching-for-the-culprits

பெரம்பலூாில் ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

248

பெரம்பலூாில் ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு.

Anti-Corruption Awareness Pledge Acceptance

பெரம்பலூா் ஆட்சியரகத்தில், அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக். 26 முதல் நவ. 1 ஆம் தேதி வரை ஊழல் எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் அ. லலிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தி. சுப்பையா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், காவல் நிலையங்களில் ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Anti-Corruption Awareness, Perambalur news




%d bloggers like this: