Another died

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் மரணம்.

415

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் மரணம். Another died of corona in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,741 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,491 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 222 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினத்தந்தி

Keywords: Another died, Covid-19, Corona, tamil news, Perambalur news




%d bloggers like this: