பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரானா (25.09.2020)
Perambalur News: Another 21 people were infected with corona in Perambalur district.
பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 1,719
குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,570
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,698 போ் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் குணமடைந்த 1,570 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 107 போ் பல்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் பெரம்பலூா், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,719- ஆக உயா்ந்துள்ளது.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.