பெரம்பலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் முக்காடு போட்டு போராட்டம். Anganwadi workers protest in Perambalur
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 22-ந் தேதி அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் காத்திருப்பு போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
சாமியானா பந்தல் அமைத்து, குடும்பத்தை விட்டு பிரிந்து அங்கேயே உணவு சாப்பிட்டு, விடிய, விடிய தங்கி கடும் சிரமத்துக்கு இடையே காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களது சேலையை தலையில் முக்காடாக போட்டு எங்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 38 ஆண்டுகளாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மட்டுமல்லாமல், பிற அரசு துணை பணிகளையும் செய்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் கோஷங்களை எழுப்பினர்.
keywords: Anganwadi workers, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.