ADVERTISEMENT
Amnesty in UAE Effective September 1

அமீரகத்தில் பொதுமன்னிப்பு: செப்டம்பர் 1 முதல் அமல்.!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொது மன்னிப்பு: விசா பிரச்சினை இல்லாமல் புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.

Amnesty in UAE: Effective September 1

அடுத்த மாதம் செப்டம்பர் 1 அன்று ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ள பொது மன்னிப்பு திட்டம். விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் அநேக வெளிநாட்டினருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு, சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்து வேலை தேடி துபாயில் நுழைந்த பங்களாதேஷ் நாட்டைச்சார்ந்த ஒருவர். முதலில் அவருக்கு வேலை கிடைத்தாலும், கோவிட் தொற்றின் தாக்கம் காரணமாக அவரின் விசா நிரந்தரமாக்கப்படவில்லை. இதனால், அவர் சட்டவிரோத குடியிருப்பாளராக மாறினார். எனினும், அரசாங்கத்தின் புதிய பொது மன்னிப்பு திட்டம் அவருக்கு தற்போது ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. “அமீரகத்தின் இந்த பொது மன்னிப்பினால், நான் என் கனவை நிறைவேற்ற முடியும்,” என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாக அந்நாட்டின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அது போலவே 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்த மற்றொருவரும், தனது முதலாளியின் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டார். இதனால் அவரும் விசா பெற முடியாமல் சிக்கியிருந்தார். நாட்டிற்கு செல்ல நாடினாலும் அதற்காக எவ்வளவு திர்ஹம் அபராதமாக கட்டவேண்டி இருக்குமோ என்று தங்கிவிட்டார். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தார். இந்த மன்னிப்பு திட்டம் அவருக்கு தனது நாட்டுக்கு திரும்பி செல்லும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. “நான் இனி அமீரக சட்டத்திற்கு கட்டுப்பட்டு எந்த விதமான சட்டக்கேடுகளிலும் ஈடுபடாமல் வாழ்வேன்,” என அவர் உறுதியுடன் கூறினார்.

இந்த மன்னிப்பு திட்டம் பல ஓவர்ஸ்டே குடியிருப்பாளர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது என்பது தெரிகிறது. இதன் மூலம், அவர்கள் தங்கள் நிலையை சரிசெய்து, திரும்பிய பிறகு எந்த பிரச்சினையும் சிக்கலும் இல்லாமல் வாழ ஏதுவாக இருக்கும்.

ADVERTISEMENT

2007 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக அரசு நான்கு முறை பொது மன்னிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மன்னிப்புகள், சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு புதிய வாழ்க்கையை தொடங்க உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Keywords: Amnesty in UAE, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Dubai News Tamil, Dubai Tamil News


அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

வளைகுடா செய்திகள்
துபாய்: இனி பயணத் தடையை நீக்க விண்ணப்பம் வேண்டாம்
துபாய் மெட்ரோ 15 ஆண்டு கொண்டாட்டம்: சிறப்பு நிகழ்ச்சிகள்
அமீரக தொழிலாளர் சட்டம்: 2024 திருத்தங்களின் முக்கிய அம்சங்கள்

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *