ADVERTISEMENT
Amnesty Golden opportunity for overstayers in UAE!

அமீரகத்தில் பொதுமன்னிப்பு: ஓவர்ஸ்டேவில் தங்கியவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!

Amnesty: Golden opportunity for overstayers in UAE!

செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு மாதங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விசா பொதுமன்னிப்பு திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இது, UAEயில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு, தங்கள் நிலையை முறைப்படுத்தவோ அல்லது அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறவோ மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) அறிவித்ததாவது, அதிக காலம் தங்கியவர்களுக்கு எவ்வித அபராதமும் அல்லது வெளியேறும் கட்டணமும் விதிக்கப்படாது. மேலும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், UAEயில் மீண்டும் நுழைவதற்கான தடை விதிக்கப்படாது. சரியான விசாவுடன் அவர்கள் மீண்டும் UAEயில் வரலாம்.

பொதுமன்னிப்பு திட்டம்: யார் பயன்படுத்தலாம்?

இந்த பொது மன்னிப்பு திட்டம் சுற்றுலா மற்றும் காலாவதியான அனைத்து வகை விசாக்களுக்கும் பொருந்தும். ஆவணங்கள் இல்லாமல் பிறந்தவர்களும், தங்கள் நிலையை சரிசெய்ய இந்த பொது மன்னிப்பு திட்டத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக, ஸ்பான்சர்களிடமிருந்து வெளியேச் சென்றவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு திட்டம் பொருந்தாது.

ADVERTISEMENT

பொது மன்னிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • நுழைவுத் தடை இல்லாமல் வெளியேறலாம்: நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் தற்பொழுது மீண்டும் அமீரகம் வர அவர்களுக்கு எந்த விதமான நுழைவுத் தடை விதிக்கப்படாது.
  • அபராதம் இல்லாமல் நாட்டு விட்டு வெளியேறலாம்: அதிக காலம் தங்கியதற்காக அபராதம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
  • விசா சம்மந்தமான அபராதங்கள் விலக்கு: காலாவதியான UAE தேசிய ஐடி தொடர்பான அபராதங்கள், பணி ஒப்பந்தம் வழங்காததற்கான அபராதங்கள் அனைத்தும் விலக்கப்படும்.

விண்ணப்பிக்கும் மையங்கள் மற்றும் நேரங்கள்

UAEயின் ஒவ்வொரு அமீரகத்திலும் பொதுமன்னிப்பு திட்டத்துக்கான விண்ணப்ப மையங்கள் உள்ளன. துபாயில், அனைத்து அமர் மையங்களும் (Amer centres) இந்த சேவைகளை வழங்குகின்றன. அபுதாபியில், அல் தஃப்ரா, சுவைஹான், அல் மக்கா, அல் ஷஹாமா ஆகிய இடங்களில் உள்ள ICP மையங்கள் திறந்திருக்கும்.

இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24/7 ஆன்லைனிலும் இந்த சேவைகள் கிடைக்கின்றன.

UAE விசா பொதுமன்னிப்பு திட்டம், சட்டவிரோதமாக ஓவர் ஸ்டேயில் தங்கியவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் நிலையை முறைப்படுத்தவும் அல்லது அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

Keywords: Amnesty, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Dubai News Tamil, Dubai Tamil News


அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

வளைகுடா செய்திகள்
அமீரகத்தில் பொதுமன்னிப்பு: செப்டம்பர் 1 முதல் அமல்.!
துபாய்: இனி பயணத் தடையை நீக்க விண்ணப்பம் வேண்டாம்
துபாய் மெட்ரோ 15 ஆண்டு கொண்டாட்டம்: சிறப்பு நிகழ்ச்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *