Ameeragathin Muthal Punitha Quran TV Channel Thuvakkam
ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித குர்ஆன் டிவி சேனலை ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை ஷார்ஜா தொடங்க உள்ளது. இந்த சேனல் ஒரு சோதனை ஒளிபரப்புடன் தற்போது தொடங்கும், இதில் புனித குர்ஆனின் வசனங்களின் புதிய மற்றும் பிரத்தியேகமான கிராத் (ஓதுதல்கள்) இடம்பெறும்.
அழகிய முறையில் கிராத் ஓதுவதில் புகழ்பெற்ற அறிஞர்களால் தினசரி கத்மா (தொடக்கத்திலிருந்து இறுதி வரை குர்ஆனை முழுமையாக ஓதுதல்) ஓதுதல்களைக் 24/7 நேரமும் பார்க்கவும் கேட்க முடியும்.
கிராத்தோடு இல்லாமல் இஸ்லாம் சம்மந்தமான கருத்துக்களை போதிக்கும் குறுகிய கல்வி நிகழ்ச்சிகளை சேனல் ஒளிபரப்பும். பொது மக்களுக்கு அவற்றை எளிதாகப் புரிய வைக்கவும் உதவும். குர்ஆனைப் பற்றிய சரியான புரிதலை ஊக்குவிப்பதும், இன்றைய பார்வையாளர்களுக்கு எளிதாக புரியும் வகையில் விளக்கங்களை வழங்குவதும் இதன் முதன்மையான நோக்கமாகும்.
புனித குர்ஆன் சேனல் என்பது ஷார்ஜா ஒலிபரப்பு ஆணையத்தின் (SBA) சமீபத்திய முயற்சியாகும். சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளரும் ஷேக் டாக்டர். சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுவதாகும்.
SBA இன் இயக்குனர் சலிம் அலி அல் கைத்தி அவர்கள் கூறும் போது: “குர்ஆனிய போதனைகளைப் போதிக்கும் வகையில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும், ஊடக தளத்தை நிறுவுவதற்கும் ஷார்ஜா ஆட்சியாளரின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது” என்று வலியுறுத்தினார்.
புனித குர்ஆன் சேனல் மற்றும் வானொலியின் இயக்குனர் கலீஃபா ஹசன் கலஃப், சேனல் கத்மா மற்றும் குர்ஆன் அறிவியல் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தும் என்று சிறப்பித்துக் கூறினார். “இறைவனுடன் இருங்கள், உங்களுடன் இறைவனைக் காண்பீர்கள்” என்ற முழக்கத்தின் கீழ் செயல்படும் புதிய தளமாகும். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பரந்த இஸ்லாமிய உலகில் இஸ்லாமிய ஊடகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Kewords: Quran TV Channel, Gulf Tamil News, GCC Tamil News, UAE Tamil news, Tamil Gulf News
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.