“உருளைக்கிழங்கு” இதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
உருளைக்கிழங்கு நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அற்புதமான கிழங்கு வகையைச் சார்ந்த காய் கறியாகும். அதன் தரமான சிறப்புகளால் நமது உணவோடு ஒன்றிணைந்துள்ளது. உருளைக்கிழங்கின் நமக்கு கிடைக்கும் பலன்கள், அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் உருளைக்கிழங்கினைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த கிழங்கானது பூமிக்கடியில் விளையக்கூடியது. இதன் பூர்வீகம் தென் அமெரிக்காவாக இருந்தாலும் பிற்காலாத்தில் உலகெங்கிலும் பரவியது. இது தற்போது பெரும்பாலோரின் உணவில் முக்கிய பங்காற்றி வருகிறது.
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!
ஆரோக்கியத்தை பராமரிக்க 6 டிப்ஸ்..!
உருளைக்கிழங்கு இதன் ஆரோக்கிய பலன்கள்:
1. தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது:
உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருக்கின்றது. இதன் சத்துகளை அறிந்துதான் நமது முன்னோர்கள் தங்கள் உணவுகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
இது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உண்டாக்குகிறது. மேலும், இதில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
2. நார்ச்சத்து மிக்கது:
நார்ச்சத்துள்ள உணவானது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த உருளைக்கிழங்கில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்தானது செரிமானத்திற்கு உதவுகிறது.
இது உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நார்ச்சத்தினால் உடலில் உள்ள செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தால் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கிறது.
3. ஆற்றலை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட்:
கார்போஹைட்ரேட்டுகள் பெரும்பாலும் பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பது உண்மைதான். ஆனால் சரியான வகை கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆற்றலை தரும். உருளையில் உள்ள தரமான கார்போஹைட்ரேட் சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது.
இதனால் குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இந்த கிழங்கு ஒரு நல்ல உணவாகும். செரிமான பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களுக்கு உருளையானது சிறந்த உணவாகும்.
4. மாவுச்சத்து:
உருளைக்கிழங்கில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் அதிகமாக இருக்கிறது. ஸ்டார்ச் என்பது ஒரு வகை மாவுச்சத்து. இது ஒரு ப்ரீபயாடிகாக செயல்படுகிறது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கிறது. இந்த ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் செரிமானப் பிரச்சனையை போக்குகிறது.
ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பு டிப்ஸ்..!
பாலக் கீரையின் மருத்துவ குணங்கள் !
உணவில் உருளைக்கிழங்கை சேர்த்தல்
உருளைக்கிழங்கு வழங்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி இப்போது நாம் தெரிந்துள்ளோம். அவற்றை நமது உணவில் சேர்த்துக்கொள்ள ஏதுவான வழிகளை பார்ப்போமா?
வறுத்த உருளைக்கிழங்கு
உணவுடன் எடுத்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும். அதாவது கிழங்கை நன்கு வேகவைத்து அதனுடன் சுவைக்காக மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி சாப்பிடலாம். நாக்கிற்கு நல்ல சுவையான சைடிஸ் ரெடி. அதோடு இது உடலுக்கும் நல்லது.
பிசைந்த உருளைக்கிழங்கு
நன்கு வேகவைத்த உருளைக்கிழங்கை மசிய பிசைந்து குழந்தைகள், நோயாளிகள் மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு எளிதில் செரிமானம் ஆகி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வீட்டில் செய்யும் சாம்பார், குழம்பு வகைகள், பொரியல் போன்றவற்றிலும் மற்றும் நொருக்கு தீனியாக பயன்படுத்தவும் இந்த கிழங்கை பயன்படுத்தி பயனடையலாம்.
உருளைக்கிழங்கு உண்பதால் உண்டாகும் பிரச்சனைகள்:
- உருளைக்கிழங்கு முளைவிட்டால் அதை உணவுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. காரணம் இதில் நச்சுக்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கின்றன. இதை உண்பதன் மூலம் குடல் பாதையில் எரிச்சலை தந்து குடல் சம்மந்தமான பிரச்சனைகள் உண்டாக காரணமாக அமைந்துவிடும்.
- முளைவிட்ட கிழங்கை சாப்பிடுவதால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- அனைவருக்கும் தெரிந்த விசயம்தான், இந்தக் கிழங்கை சாப்பிடுவதால் வாயு கோளாறுகள் உண்டாகிறது.
- முளைவிட்ட உருளையை கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்கவேண்டும். காரணம், கர்ப்பகாலத்தில் இதை உண்பதால் குழந்தைக்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
Mappillai Samba Rice and Its Benefits
The Shocking Health Benefits of Poongar Rice!
இறுதியாக…
உங்கள் உணவில் உருளைக்கிழங்கைச் சேர்ப்பது ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அனுபவிப்பதற்கும் எளிமையான ஒரு பயனுள்ள வழியாகும். அதே நேரத்தில் தேவைக்கு தகுந்தார் போல உருளைக்கிழங்கை பயன்படுத்த வேண்டும். சுவைக்காக கண்ட பொருட்களை பயன்படுத்தி அதன் தன்மையை மாற்றி பிரச்சனைகளை உண்டாக்கிவிடக்கூடாது. இறுதியாக… நம் உணவை நாம் தான் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.