பப்பாளி விதையின் அற்புத பயன்கள்.

2845

பப்பாளி விதையின் அற்புத பயன்கள் | Amazing Benefits of Papaya Seed

பப்பாளியின் விதையில் ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நிறைந்துள்ளது.

பப்பாளி பழம் நீரிழிவு பிரச்சினை முதல் ரத்த விருத்தி, ரத்தத்தை சுத்தம் செய்வது ஆகிய பல விஷயங்களுக்கு நல்ல மருந்து. பப்பாளியின் விதையை நாம் கண்டு கொள்வதே இல்லை. பழத்தில் இருப்பதைப் போலவே அதன் விதையிலும் நிறைய மருத்துவ குணமும் ஊட்டச்சத்துகளும் இருக்கிறது. இதை மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.

என்ன? கீழே தூக்கி எறியும் விதைகளில் இவ்வளவு நன்மைகளா?  என்று ஆச்சரியமாக இருக்கிறதா! பப்பாளி விதைகளில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றது, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…

பப்பாளி விதையின் பயன்கள் (Benefits of Papaya Seed)

ஜீரண சக்தி பப்பாளி விதை உகந்தது: (Benefits of Pappali vithai)

பப்பாளி விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் நமது செரிமாண மண்டலத்தைத் துரிதப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது: (Pappali vithaiyin Payangal)

நமது உடல் எடையை மேலும் அதிகரிக்கச் செய்யாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அதனால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவோ அடிக்கடி பப்பாளி விதைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது: (Pappali vithai Maruthuva Payan)

பப்பாளி விதைகளில் மிக அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் மற்றும் பாிலபினைல்கள் இருக்கின்றன. அதனால் இவை தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. குறிப்பாக, சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

அல்சர் பிரச்சனைக்கு தீர்வு: (Papali Seeds Benefits)

குடல் புண்களை ஆற்றுகின்ற சக்தி பப்பாளி விதைக்கு உண்டு. உடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கு மிக நல்ல தீர்வாக பப்பாளி விதையை நாம் சொல்லலாம். அதிலும் அல்சர் என்னும் வயிற்றுப்புண், உணவுக்குழாய் தொற்று இருப்பவர்கள் கட்டாயம் பப்பாளி விதைகளை பச்சையாகவோ அல்லது நன்கு உலர வைத்தோ சாப்பிட்டு வரலாம்.

மாதவிடாய் வயிற்று வலியை போக்கும்: (Papaya seeds Benefits in Tamil)

பெண்களுக்கு பப்பாளியை ஒரு அற்புதக் கனி என்று சொல்லலாம். அதுபோல, பப்பாளி விதைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற கடுமையாக வயிற்று வலி மற்றும் தொடை, இடுப்பு வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. உடலுக்குப் போதிய வலிமையைக் கொடுக்கிறது.

இயற்கை முறையில் வயிற்றைச் சுத்தம் செய்ய எளிய வழி

பப்பாளி விதையின் மற்ற பயன்கள்: (Papaya Seeds benefits in Tamil)

  • பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் மிக அதிக அளவில் இருப்பதால், இதயக் குழாய், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கின்ற ஆற்றலைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பாக பப்பாளி விதைகளைச் சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும்.
  • நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும். ஏனென்றால் தொடக்கத்தில் சிலருக்கு அது வயிற்றுப் போக்கை உண்டாக்குவதாக இருக்கலாம். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை.
  • ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டாக அரைத்து ஃபுரூட் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
  • பப்பாளி விதையோடு தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிங்கள். முடிந்தவரையில் வெ்ளளை சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம்.
  • காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.

Our Facebook Page

“பப்பாளி பழம்” இதன் பலன்கள் தெரியுமா?

உலர் திராட்சை பயன்கள்

பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள்

‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!

உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள்.

‘அத்திப்பழம்’ உண்பதால் உண்டாகும் பலன்கள்

பலாப்பழமும் அதன் பயன்களும்

பப்பாளி விதையின் அற்புத பயன்கள்

சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights