Almonds benefits

பாதாம் பருப்பில் இவ்வளவு மருத்துவ பயன்களா?

558

பாதாம் பருப்பில் இவ்வளவு மருத்துவ பயன்களா? | Almonds benefits in your Tamil.

Almonds benefits

Almonds benefits in your Tamil

பாதாம் என்றாலே விலை உயர்ந்த சத்தான பொருள் என்று நமக்கு தெரியும். ஏன் அது விலையுயர்ந்த சத்தான பொருளாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவை படிப்பதன் மூலம் அதன் பயன்களை தெரிந்து கொள்ளலாம். அதன் பயன்களால் தான் பாதாம் பருப்பு விலையில் உயர்ந்து இருக்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள். அவ்வளவு காஷ்ட்லி இல்லை என்றாலும்  கொஞ்சம் காஷ்ட்லிதான் இந்த பாதாம் பருப்பு.

[the_ad id=”18138″]

பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள்: (Almonds benefits in your Tamil)

ஆண்மைக்குறைவை போக்க

பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும்.

புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள்

பாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.

தலைமுடி பிரச்சனை

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது.

நோயெதிர்ப்பு திறன்

உடலில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் ரத்தத்தில் ஏற்கனவே உள்ளன. பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.

உடல் எடை கட்டுப்பாட்டில் வைக்க

பாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதை தவிர்த்து, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளை உண்பதால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.

இதய நோய் வராமல் தடுக்க

பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

[the_ad id=”18139″]

கொலஸ்ட்ரால்

பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.

இரத்த அழுத்தம்

பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

மார்பக புற்றுநோய்

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.

சுறுசுறுப்பு

மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.

எலும்புகள் வலுவடைய

பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.

அப்புறம் என்ன? பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பீர்களா?

Our facebook page

Keyword: Almonds benefits in your Tamil, Health tips in Tamil

[the_ad_placement id=”after-content”]




%d bloggers like this: