புதிய செய்தி :

பெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.

பெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்து வெளியிட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீது உள்ள ஆட்சேபனை அல்லது கூற்றுகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இறுதி செய்யும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏற்கனவே கடந்த 2-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் குன்னம் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் மீது ஆட்சேபணை அல்லது கூற்றுகள் ஏதும் பெறப்படவில்லை. அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தினரால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (மேலும் வாசிக்க தினத்தந்தி…)




Leave a Reply