ஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு

ஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..!

578

ஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..!


UAE News : All beaches in Sharjah open today..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் உள்ள அனைத்து கடற்கரைகளும் இன்று திறப்பதாக ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஷார்ஜா முழுவதிலும் மூடப்பட்டிருந்தது. இன்று (ஆகஸ்ட் 3 திங்கள் கிழமை) முதல் ஷார்ஜாவின் அனைத்து பொது கடற்கரைகளும் மீண்டும் திறக்கப்படுவதாக ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.

கடற்கரைக்குச் செல்லும் பொது மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது முகக்கவசம் அணிந்து வருவது, சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை விதிமுறைகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஷார்ஜாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்களுடன் கூடிய ஹோட்டல்கள் கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

keyword: UAE News, UAE News today, Gulf Tamil News, GCC Tamil News
%d bloggers like this: