Alaghu Kurippu

அழகுக்கு அழகு சேர்க்க என்ன செய்யலாம்?

860

அழகுக்கு அழகு சேர்க்க என்ன செய்ய செய்யலாம்? Alagu Kurippugal in Tamil..!

அழகு குறிப்புகள் (Beauty Tips in Tamil)

அழகாக இருக்கும் எதையும் கூடுதலா அழகுபடுத்தினா ரொம்ப அழகாக இருக்கும். அப்போ அழகுக்கு அழகு சேர்க்க தயார் ஆயிட்டீங்களா? அப்போ இந்த பதிவை முழுவதும் படிங்க உங்களுக்காக சில முக்கியமாக அழகு குறிப்புகள் இதில் தந்துள்ளோம்.

எப்போவும் எல்லோரும் தனித்தனியா அழகு குறிப்புகளை தருவாங்க. உதாரணத்திற்கு முகம் அழகாக இருப்பதற்கு, கூந்தலை பராமரிப்பது எப்படின்னு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியா டிப்ஸ் கொடுப்பாங்க. நாமும் அப்படித்தான் கொடுக்கபோகிறோம். ஆனால் இந்த பதிவில் ஒட்டு மொத்த உடலும் அழகு பெறுவதற்கான குறிப்புகள் வழங்குகிறோம்.

அழகுப்படுத்த செயற்கை முறை சரியா? (Azhahu Kurippu)

உடலை அழகாக வைத்து கொள்ள செயற்கை முறைகளை பயன்படுத்தி உடல் அழகை கெடுத்து கொள்ள வேண்டாம். இந்த செயற்கை முறைகளால் முழுமையான பயனும் கிடைப்பதில்லை என்பதுடன் உடலுக்கு பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. இயற்கை முறையில் முழு உடல் அழகு பெற அழகு குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.

கண்களில் கருவளையமா?  (Alaghu Kurippu)

வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர் சேர்த்து பசைபோல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தொடர்ந்து போட்டு வர முப்பது நாட்களில் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும்.

முக அழகிற்கு பப்பாளி: (Alahu Kurippu)

பப்பாளிப் பழத்தை தினமும் முகத்தில் தடவி கொஞ்ச நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவினால் முகம் பிரகாசமாகவும் நல்ல பொலிவுடன் பளப்பளப்பாக இருக்கும். அதே போல முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருக்கம் மறைந்து அழகாக காணப்படும். தினமும் உறங்கப்போகும் முன்பாக மஞ்சள், தேனுடன்  குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுப்பாகும்.

இதழ்களை பராமரிக்க பீட்ரூட் லிப்ஸ்டிக்: (Beauty Tips in Tamil)

பீட்ருட் சமைத்து சாப்பிடுவதற்கு மட்டுமில்லை. அதை நம்முடைய உதடுகளை அழகுப்படுத்தவும் பயன் படுத்திக்கலாம் தெரியுமா? பீட்ருட்டை சிறிய துண்டாக வெட்டி உங்கள் உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போல் போட்டு வந்தாலே போதும். உங்கள் உதடு அவ்வளவு அழகாக இருக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்

‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!

பாதாம் பருப்பில் இவ்வளவு மருத்துவ பயன்களா?

சருமம் அழகு பெற: (Alaghu Kurippu)

முட்டைகோஸ் இலையில் சாறு எடுத்து அதை ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன் கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசிவருவதன் மூலம் கருமை அடைந்த தோலின் நிறம் நம்முடைய இயற்கையான நிறத்திற்கு மாறிவிடும்.

“மங்கு” என்னும் கருப்பு திட்டுகளை நீக்க: (Alahu Kurippu)

சிலருக்கும் முகத்தில் கருப்பு நிற திட்டுகள் இருக்கும். அது அவர்களின் முக அழகை கெடுத்துவிடும். கிராம புறங்களில் இதை “மங்கு” என்று சொல்லுவார்கள். இந்த “மங்கு” வை போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள் வேண்டும். அரைத்த பேஸ்ட்டை கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். இது போல் சில தடவை செய்து வந்தால் முகத்தில் உள்ள மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

கழுத்து கருப்பு நீங்க: (Azahu Kurippu)

கொஞ்சம் வெங்காய சாறு இரண்டு சொட்டு ஆலிவு எண்ணெய் அதோடு பயத்த மாவு சேர்த்து கழுத்துப் பகுதியின் கருப்பான இடத்தில் தடவி கழுத்திலிருந்து தாடையை நோக்கி லேசாக மசாஜ் செய்யுங்கள். இது போல் தொடர்ந்து செய்ய விரைவில் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு நிறம் மாறிப் போகும்.

நகம் அழகிற்கு பாதாம் எண்ணெய்: (Alagu Kurippu)

தினமும் நீங்கள் பால் அருந்துவீர்கள் அந்த பாலுடன் கொஞ்சம் பேரிச்சை பழத்தையும் சேர்த்து குடித்து வருவதன் மூலம் நகங்கள் உடையாமல் பலமாக இருக்கும். பாதாம் எண்ணெயை நகத்திற்கு  தடவி வந்தால் நகம் நல்ல பொழிவுடன் பளப்பளப்பாக இருக்கும்.

அப்புறமென்ன இன்றைக்கே உங்கள் உடலை அழகுப்படுத்த ஆரம்பிக்க வேண்டியதுதானே.

Our Facebook Page
%d bloggers like this: