ADVERTISEMENT
Air-India-Express

அபுதாபி-திருச்சி இடையே மேலும் ஒரு விமான சேவை

Air India Express Adds Abu Dhabi-Trichy Flight June 18

இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இந்தியாவின் பல நகரங்களுக்கும் இடையே பல விமானங்களை இயக்குகிறது. இதன்கீழ், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான திருச்சி விமான நிலையமும், அபு தாபி விமான நிலையமும் இடையே விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபு தாபி மற்றும் திருச்சி இடையே மேலும் ஒரு நேரடி விமான சேவையை வழங்கும் என அறிவித்துள்ளது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது வாரத்தில் இரண்டு தடவை இயக்கிவந்தது. ஜூன் 18 முதல் வாரத்தில் மூன்று நாட்கள் தனது சேவையை இயக்கும் என்று தெரிவித்துள்ளது.

சாதாரணமாக அபு தாபியிலிருந்து சென்னைக்கு பல நேரடி விமானங்கள் உள்ளன, ஆனால் அபு தாபியிலிருந்து தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களுக்கு போதுமான விமானங்கள் இல்லை. தற்பொழுது அபு தாபியிலிருந்து திருச்சி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மட்டுமே நேரடி விமான சேவையை வழங்குகிறது.

மேலும், மே 17 வரை வாரத்தில் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமே இந்த விமான சேவை வழங்கப்பட்டது. இதன் காரணமாக, அபு தாபியில் வசிக்கும் தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மக்கள், மதுரை அல்லது திருச்சிக்கு செல்ல துபாய் அல்லது ஷார்ஜா வழியாக பயணிக்க வேண்டியிருந்தது. பின்னர் பயணிகள் தேவை காரணமாக மே 17 அன்று முதல் கூடுதல் சேவையை வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கியது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது அபு தாபி மற்றும் திருச்சி இடையே மேலும் ஒரு கூடுதல் விமான சேவையை அறிவித்துள்ளது. இது தமிழக பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூடுதல் விமான சேவையை ஜூன் 18 செவ்வாய்க்கிழமையிலிருந்து இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இதனால், திருச்சி விமான நிலையம் மற்றும் அபு தாபி சர்வதேச விமான நிலையம் இடையே நேரடி விமானங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும். இந்த கூடுதல் விமான சேவைகள் அபு தாபியை சுற்றியுள்ள தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும், இந்த விமானம் செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, இரவு 9.40 மணிக்கு அபு தாபிக்கு வந்தடையும். பின்னர் இரவு 10.40 மணிக்கு அபு தாபியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த கூடுதல் விமான சேவைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்ய தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Keywords: Air India Express, Abu Dhabi-Trichy Flight

Our Facebook Page

ADVERTISEMENT

ALSO READ:
துபாய் விமான நிலையத்தில் ஹஜ் பயனிகளுக்காக சிறப்பு கவுன்டர்கள்
கத்தார்: மானியத்துடன் கூடிய குர்பான் ஆடுகள் விற்பனை
ஈத் அல் அதா விடுமுறையை கொண்டாட எட்டு கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *