ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்

644

[the_ad id=”7250″]

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்.

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உங்கள் தோட்டக்கலை துறை அல்லது வேளாண் விரிவாக்க அதிகாரியை அணுகவும். இவர்களின் தொலைபேசி எண் அறிய உழவன் செயலியை அணுகவும்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்திற்கு, 2020-21ம் ஆண்டிற்கான நுண்ணீர் பாசனம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், பிற விவசாயிகள், 75 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் நில வரைபடம், கூட்டு வரைபடம், சிறு குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது கொல்லிமலை, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்

பெரம்பலூரில் அமமுக மாணவரணி நகரச் செயலா் கொலை.

[the_ad id=”7251″]

மேலும், பிரதம மந்திரியின் பாசனத்திட்டத்தின் மூலம், விளைநிலங்களில் நீர் சேமிக்கும் பொருட்டு, தண்ணீர் தொட்டி அமைக்க, ரூ.40,000 அல்லது 50 சதவீத மானியம், ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25,000 அல்லது 50 சதவீத மானியம், மின்விசை இயந்திரம் வாங்குவதற்கு ரூ.15,000 அல்லது 50 சதவீதம் மானியம், நீர் எடுத்து செல்லும் குழாய் அமைக்க ரூ.10,000 அல்லது 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என கொல்லிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

M.ஞானசேகர்

விவரம் பெற :
உயர்திரு :
M.ஞானசேகர் அவர்கள்
அலைபேசி : 95662 53929
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்
சென்னை

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: