UAE-Oman train service!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் ரயில்வே திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து.
எதிஹாட் ரயில், ஓமன் ரயில் மற்றும் முபதாலா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஆகியவை ஓமானி-எமிராட்டி ரயில் நெட்வொர்க் திட்டத்தைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த கூட்டு இரயில்வே நெட்வொர்க்கிற்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு தேவைப்படும். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானின் வியாபார சந்தைகளுக்கு நல்ல துவக்கமாக இருக்கும். இந்த ரயில் போக்குவரத்தினால் இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வழி வகுக்கும்.
முன்பு ஒமான்-எதிஹாட் ரயில் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஹஃபீத் ரயில் என்று அழைக்கப்படும். ஒமான் சுல்தானகத்திற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் நீண்டு கிடக்கும் ஜெபல் ஹஃபீத் மலைத்தொடருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே நெட்ஒர்க்கினால் எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்கும். வர்த்தக துறைமுகங்களை இரு நாடுகளுக்குள் உள்ள ரயில்வேயுடன் இணைக்கும். ஒரு ரயில் பயணத்தில் 15,000 டன்களுக்கும் அதிகமான சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.
சுரங்கம், இரும்பு மற்றும் எஃகு, விவசாயப் பொருட்கள் மற்றும் உணவு, சில்லறை வணிகம், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை போன்ற இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஹஃபீத் ரயில் முக்கிய பங்களிக்கும்.
பயணிகள் ரயில் சேவைகள் சமூக மற்றும் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும். அதே நேரத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். பயணிகள் ரயில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். சோஹர் மற்றும் அபுதாபி இடையேயான தூரத்தை 100 நிமிடங்களிலும், சோஹார் மற்றும் அல் ஐனுக்கு 47 நிமிடங்களிலும் கடந்து செல்லும். ஒரு ரயிலில் 400 பயணிகள் வரை பயணிக்க முடியும்.
ஒமான் சுல்தான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் ஐக்கிய அரபு அமீரக அரசுமுறைப் பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே…
நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி உகந்ததா?
உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தூக்கம் தேவை?
Keywords: UAE-Oman train service, UAE Tamil News, Tamil Gulf News