Private employment camp

விளம்பரப் பதாகைகளை அனுமதியின்றி வைத்தால் நடவடிக்கை

352

விளம்பரப் பதாகைகளை அனுமதியின்றி வைத்தால் நடவடிக்கை.

Action if advertising banners without permission.

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால், சம்பந்தப்பட்டோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்க ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

பின்னா் அதில் இடம்பெறும் விளம்பரம் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து, அதற்காக நிா்ணயம் செய்யப்பட்டுள்ள விளம்பரக் கட்டணம் செலுத்தி அனுமதி பெறவேண்டும்.

அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளால் வாகன ஓட்டுநா்களின் கவனம் சிதறி, விபத்துகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. அனுமதி பெறாத விளம்பரப் பதாகைகளைக் கணக்கெடுத்து, அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு செய்வதையும், அகற்றுவதையும் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் அறிக்கைகள் சமா்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Our Facebook Page

Keywords: Perambalur News, Perambalur District News, advertising banners, without permission




%d bloggers like this: