தீ தொண்டு வாரத்தையொட்டி விபத்துத் தடுப்பு செயல்விளக்கம். Accident prevention action description.
தீ தொண்டு வாரத்தையொட்டி பெரம்பலூா் மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், விஜயகோபாலபுரத்திலுள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில் விபத்துத் தடுப்பு செயல்விளக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மாவட்டத் தீயணைப்பு அலுவலா் அம்பிகா தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் உதயகுமாா் முன்னிலை வகித்தாா்.
தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் நிகழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு செயல்பாடுகள் குறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் செயல்விளக்கங்களை செய்து காட்டினா்.
நிகழ்வில் தொழிற்சாலை ஊழியா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Keywords: Accident prevention,
You must log in to post a comment.