கால்கிலோ எடையில் ஜப்பானில் பிறந்த குழந்தை.

கால்கிலோ எடையில் ஜப்பானில் பிறந்த குழந்தை. ஜப்பானில் கால் கிலோ அளவில் அதாவது 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உயிர்பிழைத்தது. 

இந்த ஆண் குழந்தையை உலகின் மிகச்சிறிய குழந்தை என நம்பப்படுகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில்  சிசேரியன் மூலம் பிறந்த இந்த குழந்தை மிகவும் சிறியதாக இருந்தது. கைக்குள் அடங்கிவிடும் அளவுக்கு இருந்ததாக தெரிவித்திருந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் வரை அந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துத்தான் கண்கானிப்பட்டது. இருப்த்து நான்கு வார கருவாக இருந்தபோது பிரசவிக்கப்பட்ட இக்குழந்தை ஐந்து மாதங்களுக்கு பின்னர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை மூலம் தேறியுள்ளது. இப்பொழுது அக்குழந்தையின் எடை எவ்வளவு தெரியுமா? மூன்று கிலோ 200 கிராம், தற்போது உணவும் கொடுக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தை இந்த முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் சந்தோஷத்தில் இருப்பதாக டோக்கியோவின் கெய்ரோ பல்கலைகழக மருத்துவமனை தெரிவிக்கிறது. எனது மகன் எனக்கு கிடைப்பானா என்றுதான் நினைத்தேன் இப்போது நல்ல முறையில் எடை கூடி எனக்கு கிடைத்துவிட்டான் என்று கூறியதாக  மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முன்னதாக 274 கிராம் அளவில் ஜெர்மனியில் பிறந்த குழந்தையொன்றுதான் மிகச்சிறியதாக இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஜெர்மனியில் பெண் குழந்தை 252 கிராம் எடையுடன் பிறந்து உயிர் பிழைத்தாக செய்திகள் வெளியானது.
பொதுவாக ஒரு கிலோ எடைக்கு கீழ் ஜப்பானில் பிறக்கும் குழந்தைகளில் 90% உயிர்பிழைத்துவிடும். ஆனால் 300 கிராமுக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளில் 50% மட்டுமே உயிர் பிழைக்கின்றன என கியோ பல்கலைக்கழக மருத்துமனை தெரிவித்துள்ளது.
மிகவும் சிறிய அளவில் பிறக்கும் குழந்தைகளை பொருத்தவரை பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் பிழைக்கும் வீதம் குறைவு. இதற்கான காரணத்தை இதுவரை மருத்துவ நிபுணர்களால் கூற முடியவில்லை.

25total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: