8th graduates

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

480

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

Jobs for 8th graduates with a salary of Rs 50,000!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் (Anna University)

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி – 02 திட்ட இணை உதவியாளர் – 02 திட்ட உதவியாளர் – 02 அலுவலக உதவியாளர் – 01

கல்வித் தகுதி : தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி – பி.இ, பி.டெக் தேர்ச்சியுடன் எம்பிஏ படித்திருக்க வேண்டும். மேலும், 8 வருட பணி அனுபவம் அவசியம். திட்ட இணை உதவியாளர் – பி.இ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி தேர்ச்சி பெற்று 5 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். திட்ட உதவியாளர் – பி.இ, பி.காம், பி.இ, பி.டெக், MCA, M.Com, M.Sc படித்திருக்க வேண்டும். மேலும், 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் – 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி – ரூ.50,000 திட்ட இணை உதவியாளர் – ரூ.40,000 திட்ட உதவியாளர் – ரூ.20,000 அலுவலக உதவியாளர் – ரூ.16,000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.09.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : DIRECTOR, CENTER FOR TECHNOLOGY DEVELOPMENT AND TRANSFER ANNA UNIVERSITY, CHENNAI – 600 025

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.




%d bloggers like this: