குற்றங்களை தடுக்க

குற்றங்களை தடுக்க காவல் நிலையங்களுக்கு 8 ரேஸ் குழு.

747

குற்றங்களை தடுக்க காவல் நிலையங்களுக்கு 8 ரேஸ் குழு.


Perambalur News : 8 Race Team to Perambalur District Police Stations to Prevent Crimes.

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க காவல் நிலையங்களுக்கு 8 ரேஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை துணைத்தலைவர், உயர் அதிகாரிகளுக்கு வரும் புகார்களுக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆரம்பகட்ட விசாரணை செய்தல், மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தல் போன்றப் பணிகளுக்காக திருச்சி சரகத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரேஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் ஆகிய 8 காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு ரேஸ் குழு என 8 ரேஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு குழுவிலும் தலா 3 பேர் இருப்பார்கள்.

Perambalur News :

பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் 8 ரேஸ் குழுவினரின் பணிகளை காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பிறகு இது பற்றி அவர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில், பாதிக்கப்படும் பொதுமக்களின் குறைகள், புகார்கள், குற்ற நிகழ்வுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பாலியல் வன்முறைகள் போன்ற புகார்களை 04328-225085 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

இந்தப் புகார்கள் குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு துரிதமாக நேரில் சென்று விசாரித்து, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், புகார் மனுக்களின் தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் இந்த ரேஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் ஏடிஎஸ்பிகள் கார்த்துகேயன், நீதிராஜ் பெரம்பலூர் டிஎஸ்பி கென்னடி, காவல் ஆய்வாளர் வனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Keywords: perambalur news, perambalur News today%d bloggers like this: