விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை செய்யலாம் வாங்க.

735

[the_ad id=”7251″]

விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை செய்யலாம் வாங்க.


இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி இருக்கிறது. விநாயகருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுவது தான் விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற, சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இந்த விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு என்னவென்றால், கணிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வைத்து பூஜை செய்து வழிபடுவது, வகை வகையாகக் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவதும் தான். சிலருக்கு என்னதான் ஆண்டுதோறும் கொழுக்கட்டை செய்தாலும் சரியாக வருவதில்லை. அப்படி இருந்தால் இதைப் படியுங்கள். உங்களுக்கு லாவகமாக கொழுக்கட்டை செய்ய வரும்.

விநாயகர் சதுர்த்தி அன்று, வகைவகையாக நைவேத்தியங்கள் இருக்கும். எல்லா சிறப்பு நாட்களுக்கும் செய்யும் பொங்கல், சுண்டல் கட்டாயம் இருக்கும். அதுதவிர, விநாயகர் சதுர்த்தி என்றாலே எல்லோருக்கும் முதலில் வந்து நிற்பது கொழுக்கட்டை தான். கொழுக்கட்டையிலும் பல வகைகளுண்டு. அவை பற்றி பார்ப்போம். அப்பம் சீடை கொழுக்கட்டை பூரண் கொழுக்கட்டை உளுந்துக்கொழுக்கட்டை எள்ளுக்கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை இவற்றையெல்லாம் எப்படி செய்யலாம் என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

[the_ad id=”7251″]

அப்பம்

பொதுவாக நைவேத்தியத்திற்காக அப்பம் செய்கின்ற பொழுது நெய்யில் செய்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். தேவையான பொருள்கள் கோதுமை மாவு – 1 கப் அரிசி மாவு – முக்கால் கப் வெல்லம் – 1 கப் தேங்காய் துருவல் அல்லது நறுக்கியது – கைப்பிடியளவு சோடா உப்பு – சிட்டிகையளவு ஏலப்பொடி – அரை ஸ்பூன் நெய் – பொரிக்கத் தேவையான அளவு வாழைப்பழம் – 2

செய்முறை

வாழைப்பழத்தை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட வெல்லம், மாவுப்பொருள்கள், ஏலக்காய் பொடி, சோடா உப்பு, தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து அழுத்திப் பிசையவும். சிறிது சிறிதாக தண்ணீர் அல்லது பால் சேர்த்துக் கொள்ளலாம். தோசை மாவு பதத்துக்குக் கலந்து கொள்ளுங்கள். அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து, குழிக்குள் நெய் தடவி, மாவை ஊற்றி, மேலே சில துளிகள் நெய்விட்டு சுட்டு எடுங்கள். மாவை அரை மணிநேரம் ஊறவைத்து சுட்டால் அப்பம் பஞ்சு போல மெத்து மெத்தென்று இருக்கும்.

[the_ad id=”7251″]

பூரணக் கொழுக்கட்டை

தேவையான பொருள்கள் தேங்காய் துருவல் – 1 கப் வெல்லம் – முக்கால் கப் ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவைப்பட்டால்

செய்முறை

கடாயில் அரை கப் அளவுக்கு தண்ணீர் வைத்து, தண்ணீர் சூடானதும் இதில் வெல்லத்தைப் போட்டு கரைய விட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதை அடுப்பில் வைத்து, ஏலக்காய்ப் பொடி மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறுங்கள். எல்லா பொருள்களும் ஒன்று சேர்ந்து வரும்போது இறக்கி, சிறிது ஆறவிட்டு உருண்டை செய்து கொள்ளுங்கள். அரிசி மாவை கிளறி சொப்பு செய்து அதற்குள் இந்த தேங்காய்ப் பூரணத்தை வைத்து, மூடி ஆவியில் வைத்து வேகவிடுங்கள். சுவையான சூப்பர் தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.

[the_ad id=”7251″]

உளுந்து காரக் கொழுக்கட்டை

தேவையான பொருள்கள் உளுத்தம் பருப்பு – 1 கப் பச்சை மிளகாய் – 3 சிவப்பு மிளகாய் – 4 பெருங்காயம் – சிறிது உப்பு – சிறிதளவு கறிவேப்பிலை – சிறதைளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு – சிறிது இஞ்சி – பொடியாக நறுக்கியது செய்முறை

உளுந்து நன்கு கழுவி முக்கால் மணி நேரம் ஊற வைத்துவிடுங்கள். ஊறிய உளுந்தை பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வைத்து வேகவிடுங்கள். வேக வைத்ததை சிறிது ஆறவிட்டு, மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் பூப்பூவாக உதிரி உதிரியாக வரும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து உதிர்த்து வைத்துள்ள பூரணத்தைப் போட்டு நன்கு கிளறுங்கள். உப்புமாவைப் போல உதிரி உதிரியாக வரும். அதை கொழுக்கட்டை மாவை (அரிசி மாவு) சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவைத்து எடுங்கள். எடுத்த பின் தாளித்த உளுந்து பூணத்தோடு கொட்டி கிளறுங்கள். உளுந்து காரக்கொழுக்கட்டை தயாராகி விடும்.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
%d bloggers like this: