சாலை வரி செலுத்தாத 7 பொக்லைன் பறிமுதல்

சாலை வரி செலுத்தாத 7 பொக்லைன் பறிமுதல்

343

சாலை வரி செலுத்தாத 7 பொக்லைன் பறிமுதல்

சாலை வரி செலுத்தாத 7 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரியை அரசுக்கு செலுத்தாமல் பொக்லைன் எந்திரங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார் ஆகியோர் கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அரசுக்கு சாலை வரி செலுத்தாமல் இயங்கி வந்த 7 பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். அதில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பொக்லைன் எந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அந்த எந்திரங்களின் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Our Facebook Page
%d bloggers like this: