6 மாத குழந்தைக்கு கேரட் எப்படி கொடுக்கணும்னு தெரியுமா?

418

[the_ad id=”7251″]

6 மாத குழந்தைக்கு கேரட் எப்படி கொடுக்கணும்னு தெரியுமா?


தாய்மார்களின் பெரிய பிரச்சனையா இருப்பதே குழந்தைங்களை சாப்பிட வைக்கிறதுதான். குழந்தைகள சாப்பிட வைக்கிறதுகுள்ள போதும் போதும்னு ஆகிரும். ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவை தான் நீங்க கொடுக்குறீங்களா. குழந்தைங்களுக்கு பிடித்த உணவை கொடுத்து பாருங்க கண்டிப்பா அவங்க சாப்பிடுவாங்க. கொடுக்கிற உணவு மிக ஆரோக்கியமான ஒன்றா இருக்கனும் அதாங்க முக்கியம்.

பால் தவிர குழந்தைக்கு என்ன ஆரோக்கியமான உணவு கொடுக்கலானு யோசிக்காதிங்க. அனைத்து காய்கறிகளும் மிக ஆரோக்கியமான ஒன்று தான். அதிலும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் குழந்தையின் உணவில் ஒரு சத்தான உணவாக உள்ளது. உங்கள் குழந்தைகள் கேரட் கூழ் சாப்பிட பழகிய பின்பு 10 மாதங்களுக்கு பிறகு அவர்களுக்கு கேரட்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து அப்டியே சாப்பிட கையில் கொடுக்கலாம். கேரட் கூழ் எவ்வாறு குழந்தைகளுக்கு கொடுக்கலன்னு பார்க்கலாம்.

[the_ad id=”7251″]

முதலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரமிக்கும் போது கேரட்களில் இருந்து ஆரம்பிக்கலாம். கேரட்டுகளை குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்த பிறகு அத்துடன் சேர்த்து மற்ற காய்கறிகளும் வேகவைத்துக் கொடுக்கலாம். வேண்டுமென்றால் கேரட்டை இறைச்சிகளுடனும் கலந்தும் கொடுக்கலாம். முதலில் நல்ல ஆர்கானிக் கேரட்களை குழந்தைகளுக்கு தேர்வு செய்யுங்கள்.

நல்ல ஆர்கானிக் கேரட்களை தேர்வு செய்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள். அதில் உள்ள தோல்களை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பின்பு இவற்றை தண்ணீரில் போட்டு வேக வையுங்கள். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வையுங்கள். நன்றாக வேக வைத்த பிறகு அவற்றை எடுத்து வடிகட்டி குளிர்ந்த நீரில் சற்று நேரம் வைத்து இருங்கள்.

கேரட் அரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த கேரட்டை எடுத்து மிக்ஸ்யில் போட்டு நன்றாக மாவு போல் அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேரட் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

[the_ad id=”7251″]

உங்கள் குழந்தைகள் கேரட் சாப்பிட தொடங்கி விட்டால் அத்துடன் சேர்த்து மற்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். அதாவது ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், ஆப்பிள், பழக்கூழ், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பிரவுன் ரைஸ், பயறு வகைகள், மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் போன்றவற்றைக் கொடுக்கலாம். ஆனால் எந்த ஒரு உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்பும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு கொடுப்பது நல்லது.

ஏனெனில் ஒரு சில குழந்தைகளுக்கு அலர்ஜி சமந்தமான சில பிரச்சனைகள் இருக்கும் அவர்களுக்கு மருத்துவர்கள் கேரட், பீட்ரூட் அல்லது கீரை கூழ் போன்ற உணவுகளை தவிர்க்க சொல்லி அறிவுறுத்துகிறார்கள். எனவே குழந்தைகளுக்கு உணவை கொடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
%d bloggers like this: