5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து.

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து.

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து.


தமிழகப் பள்ளிகளில் பயிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இவ்வாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக பல்வேறு தளங்களிலும் எதிர்ப்புகள் இருந்தது. தற்போது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 – 2020 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

kq8l9ftg
Leave a Reply

%d bloggers like this: