வாகனங்களை அசுத்தமாக வைத்திருந்தால் 500 திர்ஹம் அபராதம்.

வாகனங்களை அசுத்தமாக வைத்திருந்தால் 500 திர்ஹம் அபராதம்.துபாயில் உள்ளவர்கள் தங்களுடைய வாகனங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் தூசிகளுடன் அசுத்தமாக இருந்தால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று துபாய் நகராட்சி அறிவித்துள்ளது.

இது சம்பந்தமான அறிவிப்பில் : பொதுவெளியில்  நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணிக்கப்படும். நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமலே அல்லது தூசி படிந்து அசுத்தமாக இருக்கும் வாகனங்களின் கண்ணாடியில் அபராதம் விதிக்கப்பட்ட அறிவிப்பு ஒட்டப்படும்.  அபராத அறிவிப்பை ஒட்டிய 15 நாட்களுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் வாகனம் நகராட்சி ஊழியர்களால் பரிமுதல் செய்யப்படும்.

அபராதம் செலுத்த வாகனம் உரிமையாளர் அல்லது ஓட்டுநர் தொடர்பு கொள்ளாத பட்சத்தில் துபாய் நகராட்சியின் விதிமுறைப்படி வாகனங்களை ஏலத்தில் விற்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நகரைத் தூய்மையாக வைத்திருப்பதற்காகவும், கோடையில் விடுமுறைக்குச் செல்பவர்களுக்கு இந்த விசயங்களை நினைவூட்டுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.

GN190710Leave a Reply

%d bloggers like this: