பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி.
5 more killed in Corona in Perambalur district.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
5 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 82 மற்றும் தலா 70 வயதுடைய முதியவர்கள் என 3 பேரும், 65, 60 வயதுடைய மூதாட்டிகள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 136 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 457 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 885 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
Keywords: 5 more killed in Corona, COVID-19
You must log in to post a comment.