5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

சுத்தியலால் தாக்கி கர்ப்பிணியிடமிருந்து 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

460

சுத்தியலால் தாக்கி கர்ப்பிணியிடமிருந்து 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கொளத்தூர் மேலத் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கலையரசி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று வந்தார். பின்னர் அவர் கழிவறைக்கு சென்று வருவதாக தனது உறவினர்களிடம் கூறிச் சென்றார்.

கலையரசியை பின்தொடர்ந்து சென்ற பெண் ஒருவர் திடீரென மிளகாய் பொடியை கலையரசி மீது தூவினார். இதனால், கண் எரிச்சல் தாங்க முடியாமல் அவதிப்பட்ட நேரத்தில் கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை அப்பெண் பறித்தார்.

இதனால், கூச்சலிட்ட கலையரசியை அந்த பெண் சுத்தியலால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.கலையரசியின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் குன்னம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரது மனைவி பிரியா(23) என்பது தெரிய வந்தது. பின்னர் பிரியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தினத்தந்தி
%d bloggers like this: