ADVERTISEMENT
494 arrested

வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து மோசடி செய்த வழக்குகளில் 494 பேர் கைது

தொலைப்பேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் சேமிப்பு மற்றும் வங்கிக் கணக்குகளில் மோசடி செய்துள்ளனர்.

“உங்கள் வங்கித் தகவலைப் புதுப்பிக்க” யாரிடமிருந்தோ சமீபத்தில் அழைப்பு வந்ததா? அப்படி உங்களை அழைத்த நபர்களைத் துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டில் வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து 406 தொலைப்பேசி மோசடி வழக்குகளில் தொடர்புடைய 494 பேரைத் துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

Why Your Business Needs Professional Printing Services

இந்த மோசடி பேர்வழிகள் தொலைப்பேசி, மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மற்றும் சமூக ஊடகங்களின் வழியாக வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் வங்கிக் கணக்குகளின் விபரங்களைப் பெற்றுள்ளனர். இந்த மோசடிகளைப் பயன்படுத்திக் கையகப்படுத்திய பணம், மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தங்கள் வங்கி விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று பொது குற்றப் புலனாய்வுத் துறையின் செயல் இயக்குநர் பிரிகேடியர் ஹரேப் அல் ஷம்சி கேட்டு கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பொதுவான தந்திரம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று கூறுகின்றனர். இதைக் கேட்டதும் வங்கி கணக்குகளை முடக்காமல் பாதுகாக்க வங்கி வாடிக்கையாளர்கள் தகவல்களைத் தெரிவித்து விடுகின்றனர். இந்த தவற்றைச் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

“வங்கிகள் ஒருபோதும் தொலைப்பேசியில் தகவல் புதுப்பிப்புகளைக் கேட்பதில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை வங்கி கிளைகள், அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி விண்ணப்பங்கள் மூலம் நேரடியாகப் புதுப்பிக்கவே அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று வங்கி அதிகாரி தெரிவித்தார்.

இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *