பெரம்பலூர் மாவட்டத்தில் 475 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 475 பேருக்கு கொரோனா.

414

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 475 பேருக்கு கொரோனா.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் சப்-கலெக்டர் உள்பட 475 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 475 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முன் களப்பணியாளரான பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜாவும் (வயது 36) கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது அரசு அலுவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6,370 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 3,825 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,496 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 47 பேரின் உயிரை கொரோனா குடித்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நொச்சிக்குளத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணும், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாரணமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: