குவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..!
Kuwait News: 450 fake companies issue fake visas in Kuwait ..!
குவைத் நாட்டில் போலி விசாக்களை விற்பனை செய்து வந்த போலி நிறுவனங்களை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளது.
குவைத் நாட்டில் இயங்கி வந்த போலி நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டவர்களுக்கு விசாக்கள் விற்பனை செய்து வந்துள்ளது. தற்போது விசாக்களை விற்பனை செய்யும் விசா வர்த்தகர்களைக் கட்டுப்படுத்தவும், போலி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் போலியான நிறுவனங்கள் மூலம் விசாக்களை பெற்ற சுமார் 1,00,000 வெளிநாட்டினர் குவைத்தை விட்டு வெளியேற்றப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக குவைத் நாட்டின் செய்து ஊடக நிறுவனமான அல் கப்பாஸ் (Al Qabas) செய்தி வெளியிட்டுள்ளது.
450 நிறுவனங்கள் போலி விசாக்களை விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த போலி நிறுவனங்களின் மூலம் இதுவரையிலும் சுமார் 1,00,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் இந்நிறுவனங்களில் பணி புரிந்ததில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உங்க தலை முடி கொட்டுதா..? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..!
- ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா?
- குறைந்த (ரூ. 4999) முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக் கோழி பண்ணை.
தற்போது 300 நிறுவனங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், மீதமுள்ள 150 நிறுவனங்கள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி நிறுவனங்களின் விசா தொடர்பான கோப்புகள் அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் மூடப்படும் எனவும், இந்த நிறுவனங்களிடமிருந்து விசாக்களை பெற்ற அனைவரையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த போலி நிறுவனங்களிடம் இருந்து விசாக்களை பெற்று மற்ற துறைகளில் பணிபுரிந்து வந்த வெளிநாட்டினர் குவைத் அரசின் கடுமையான சோதனைகளை தொடர்ந்து ஏற்கனவே குவைத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மற்றவர்கள் தங்கள் நாட்டிற்கு விமான சேவை தொடங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
keyword: Kuwait News
You must log in to post a comment.