ஓமான்-புரூனே 40 ஆண்டு உறவுகள் கொண்டாட்டம், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு துறைகளில் வளர்ச்சி.
40th Anniversary of Oman-Brunei Relations
ஓமான் மற்றும் புரூனே நாடுகள் இடையே தூதரக உறவுகளை நிறுவியதன் 40வது ஆண்டு விழாவை இன்று (திங்கள்கிழமை) கொண்டாடியது.
இந்த நிகழ்வு வெளிவிவகார அமைச்சகத்தில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளின் ஆழமான தூதரக உறவுகளை குறிக்கும் நினைவு சின்னம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய வெளிநாட்டு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலர் ஷேக் களீபா அலி அல் ஹார்தி, “ஓமான் சுல்தானகம் மற்றும் புரூனே தாருஸ்ஸலாம் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் ஆழமாகவும் பல்வேறு பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் சிறந்த முன்னேற்றங்களை அடைந்தும் உள்ளது” எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “மீன் வளர்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் பல திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகின்றன” என்று கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஓமான் நாட்டிற்கான புரூனே தாருஸ்ஸலாம் தூதர் நோரலிசான் அப்துலா மோமின், “இரு நாடுகளும் 1984ம் ஆண்டு தொடங்கி பல்வேறு பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் சகோதர உறவுகளைப் பகிர்ந்து வருகின்றன. அவற்றின் உறவுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது” என்றார்.
ஓமான் மற்றும் புரூனே நாடுகளுக்கிடையிலான உறவுகள், கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு, பொருளாதார முதலீடு, ஆற்றல் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் விதமாக மேலும் முன்னேற்றத்தை நோக்கி செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
ஒமானின் வெளிவிவகார அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சக அதிகாரிகள், புருனே தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Keywords: Oman-Brunei Relations, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Oman News Tamil, Tamil Oman News
Thanks – Times of Oman
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.