4 people killed in e-scooter and bicycle accidents this year
இந்த ஆண்டில் இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயமடைந்ததாக துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் அதாவது ஜனவரி முதல் ஜூன் வரை இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள்கள் தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர் என்று துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகள் எப்படி அல்லது எப்போது நடந்தன என்பது பற்றிய விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. ஆனால் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 7,800-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்கள் பதிவாகியுள்ளன. மேலும், 4,474 இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த குறிப்பின் அடிப்படையில் தினசரி சுமார் 43 போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மற்றும் 24 இ-ஸ்கூட்டர் அல்லது சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார் வாகனங்களின் செயல்பாட்டு விவகாரங்களுக்கான உயர் அதிகாரி மேஜர்-ஜெனரல் அப்துல்லா அலி அல் கைதி (Abdullah Ali Al Ghaithi), இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள்கள் முக்கியமான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அனுமதிக்காத பகுதிகளில் அல்லது பொதுவழிகளில் பயன்படுத்தும்போது இந்த விபத்துகள் உண்டாகிறது என்று குறிப்பிட்டார்.
60 கிலோமீட்டர் வேகத்தை மிஞ்சும் சாலைகளில் செல்லுதல், ஆபத்தான முறையில் ஓட்டிச் செல்லுதல், அதில் (இ-ஸ்கூட்டரில்) பயணிகளை ஏற்றி செல்லுதல் அது போல எதிர் திசையில் ஓட்டி செல்லுதல் போன்ற விதி மீறல்களுக்கு அதிகபட்சமாக Dh300 அபராதம் விதிக்கப்படுகிறது.
இ-ஸ்கூட்டர் பயனாளர்கள் குறிப்பிட்ட வழிகளில் மட்டுமே ஓட்டி செல்ல வேண்டும். போலீசார் அறிவித்துள்ள வகையில் சரியான உடைகள் மற்றும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இரவில் அல்லது மோசமான வானிலை நேரங்களில் இந்த வாகனங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
போலீஸ் ஆப்பின் மூலமாக அல்லது 901 எண்ணிற்கு போக்குவரத்து விதிமுறை மீறல்களை புகாரளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இ-ஸ்கூட்டர் துபாயில் பிரபலமான போக்குவரத்து முறையாக மாறியுள்ளன. ஆனால், நடைபாதை பயணிகளும், வாகன ஓட்டிகளும் இ-ஸ்கூட்டர் பயனாளர்கள் அபாயகரமாக இயக்குவதை பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.
Keywords: e-scooter and bicycle, dubai tamil news, gcc tamil news, gulf news tamil
ALSO READ:
ஹஜ்ஜின் போது கடும் வெப்பத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் மரணம்.
பரபரப்புடன் காணப்படும் துபாய் விமான நிலையம்.
ஈத் அல் அதாவை முன்னிட்டு சிறைக் கைதிகள் விடுதலை