புதிய செய்தி :

பெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது.


அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவுகளை தர வேண்டும் என்பதற்காக பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள பழைய எல்.ஐ.சி. வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. விதைத்திருவிழாவில் விவசாயிகள், பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் பாரம்பரிய ஆற்காடு கிச்சலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாம் குறுவை, கருடன் சம்பா, பூங்கார், கள்ளி மடையான், மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு மரபு நெல் விதைகளும், நாட்டு பருத்தி விதைகள், அகத்திக்கீரை, வெந்தய கீரை உள்ளிட்ட பல்வேறு வகைகளின் கீரைகளின் விதைகளும், பீர்க்கன், புடலை, பூசணி, கொடி அவரை உள்ளிட்ட கொடிவகை காய்கறிகளின் விதைகளும், கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட செடிவகை விதைகளான நாட்டு காய்கறிகளின் விதைகளும், கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி, பனி வரகு, தினை, வரகு, சாமை, கருப்பு கொள்ளு, சிவப்பு கொள்ளு ஆகிய விதைகளும் வைக்கப்பட்டிருந்தன. (மேலும் வாசிக்க தினத்தந்தி…)
Leave a Reply