33வது லீக்கில் சென்னை அணியை கட்டுக்குள் கொண்டு வந்த ஹைதராபாத்!

33வது லீக்கில் சென்னை அணியை கட்டுக்குள் கொண்டு வந்த ஹைதராபாத்!


2019 ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனின் மோசமான தோல்வியை பதிவு செய்தது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி படுமோசமாக பேட்டிங் செய்தது. பந்துவீச்சிலும் இருவரைத் தவிர மற்றவர்கள் சொதப்பினர். ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனின் மோசமான தோல்வியை பதிவு செய்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி படுமோசமாக பேட்டிங் செய்தது. பந்துவீச்சிலும் இருவரைத் தவிர மற்றவர்கள் சொதப்பினர்.

தோனி முதுகில் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பால், இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. சென்னை அணியில் தோனி ஆடாத நான்காவது போட்டியாக அமைந்தது இந்தப் போட்டி. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். எனினும், தோனி அளவுக்கு அணியை வழிநடத்த தவறினார்.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணிக்கு வாட்சன் – டு ப்லேசிஸ் அருமையான துவக்கம் அளித்தனர். 9.5 ஓவர்கள் வரை பிரியாத இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. டு ப்லேசிஸ் 45, வாட்சன் 31 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் அருமையான துவக்கத்தை பயன்படுத்த தவறினர். ரெய்னா 13, கேதார் ஜாதவ் 1, சாம் பில்லிங்க்ஸ் 0 ரன்களில் வெளியேற சென்னை அணி 14.4 ஓவர்களில் 101 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்தது.

அடுத்து ஆடிய அம்பதி ராயுடு 21 பந்துகளில் 25 ரன்கள் சேர்க்க, ஜடேஜா 20 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்து “ஏதோ என்னால முடிஞ்சது” என அணியை கடைசி ஓவர்களில் கைவிட்டார். கடைசி ஓவரில் ரன் அடிக்க திணறினார் ஜடேஜா.

சென்னை அணி தட்டுத் தடுமாறி 132 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு அருமையாக அமைந்தது, குறிப்பாக, ரஷித் கான் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார். புவனேஸ்வர், கலீல் அஹ்மது, விஜய் ஷங்கர் ஆகியோர் ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாக கொடுத்தனர்.

அடுத்து 133 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு வார்னர் – பேர்ஸ்டோ அதிரடி துவக்கம் அளித்தனர். வார்னர் 25 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹைதராபாத் அணி தடுமாறியது.

கேப்டன் கேன் வில்லியம்சன் 3, விஜய் ஷங்கர் 7, தீபக் ஹூடா 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். எனினும், இலக்கு சிறியது என்பதால், இந்த விக்கெட் வீழ்ச்சி அந்த அணியை பாதிக்கவில்லை. துவக்க வீரர் பேர்ஸ்டோ கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 61 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தார். 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை தாண்டியது ஹைதராபாத். சென்னை அணியில் இம்ரான் தாஹிர், ஜடேஜா மட்டுமே சிறப்பாக பந்துவீசினர்.

தோனி இல்லாத நிலையில் ரெய்னா பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் சிறப்பாக செயல்படவில்லை. சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தன் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. தோனி இல்லாத சென்னை அணி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது இந்தப் போட்டி

138total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: