பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலி.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று.

537

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

243 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் 5,045 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் 3,331 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தனர். சுகாதாரத்துறை அறிவிப்பின்படி கொரோனாவிற்கு மொத்தம் 42 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 1,221 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெறுகின்றனர். 1,672 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், மதுராந்தகம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிமோனியா வைரஸ்

மேலும் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் நுரையீரலை செயல் இழக்க செய்யும் நிமோனியா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பலனிக்காமல், கடந்த வாரத்தில் தினமும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் பெரம்பலூரில் ஆத்தூர் சாலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கியாஸ் எரியூட்டும் தகன மயானத்தில் கடந்த வாரத்தில் ஒரேநாளில் 10 முதல் 12 பிரேதங்களை எரியூட்டும் நிலை ஏற்பட்டது. இந்த வாரத்தில் எரியூட்டுவதற்காக வரும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 முதல் 6 ஆக குறைந்துள்ளதாக எரியூட்டும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மட்டும் கடந்த ஒருவாரத்தில் சுமார் 25 பேர் பேர் நிமோனியா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். நிமோனியா வைரஸ் தாக்கி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை கொரோனா தொற்று உறுதி என்று வந்து உயிரிழப்போர் எண்ணிக்கையுடன் சேர்க்கப்படாததால் கொரோனா தொற்று மற்றும் நிமோனியா வைரஸ் நுரையீரல் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஐ தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி

நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 39,256 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை, தடுப்பு ஊசி மையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையம், வேப்பூர், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைகள், லெப்பைக்குடிகாடு, வாலிகண்டபுரம், ஆலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3,730 கோவிஷீல்டு தடுப்பு ஊசி யூனிட்டுகளும், 380 கோவேக்சின் யூனிட்டுகளும் இருப்பில் உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: