இந்த வருடம் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் புனித ஹஜ் செய்கின்றனர்.

இந்த வருடம் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் புனித ஹஜ் செய்கின்றனர்.


ஒவ்வோர் ஆண்டும் புனித ஹஜ் செய்வதற்காக உலகிலிருந்து சவுதியின் மக்காவிற்குப் புனிதப் பயணம் வருவார்கள். ஈதுல் அத்ஹா என்னும் இந்த புனித நாளை  தியாத்திருநாள் என்றும் பக்ரீத் பெருநாள் என்றும் ஹஜ் பெருநாள் என்றும் தமிழ் முஸ்லிம் அழைப்பார்கள்.


புனித தினத்திலும் அதன் முதல் தினமான அரபா தினத்திலும் இஸ்லாமியர்கள் தங்களது கடமையான ஹஜ் என்னும் கடமையைச் செய்வார்கள். வசதி படைத்தவர்கள் இந்த கடமையை நிறைவேற்ற உலகின் பல நாடுகளிலிருந்து இந்த வருடமும் வருகை புரிந்துள்ளனர். சவுதி அரசு வெளியிட்டுள்ள குறிப்பின் படி இந்த வருடம் மட்டும் 18 லட்சம்  ஹஜ் யாத்திரிகர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சவுதி குடிமக்கள் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள மற்ற நாட்டினர் என 24 லட்சம் பேர் இந்த வருடம் செய்வதாகத் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிகமானோர்கள் ஒன்று கூடும் புனித பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

-வளைகுடா தமிழன்


வளைகுடா செய்திகளுக்கு…Leave a Reply

%d bloggers like this: