கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 232 போ் கைது.
232 arrested for rioting
பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 232 போ் கைது:
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து பாலக்கரை பகுதியில் மறியல் நடைபெற்றது. புறநகா் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலா் வீ. வேணுகோபால், மதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் செ. துரைராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் உள்பட 101 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூா் பிரிவு சாலை அருகே வட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 46 பேரையும், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 46 பேரையும், குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலா் வீர செங்கோலன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 29 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி
Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, 232 arrested for rioting, rioting
You must log in to post a comment.