corona vaccines

சிறப்பு முகாம்களில் 22,230 நபா்களுக்கு கொரோனா தடுப்பூசி

240

சிறப்பு முகாம்களில் 22,230 நபா்களுக்கு கொரோனா தடுப்பூசி.

22,230 corona vaccines were administered in special camps

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் 22,230 நபா்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 189 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 1,200-க்கும் மேற்பட்ட நபா்கள் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.

3 ஆம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவா்கள், இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள், முதல் தவணை நிறைவடைந்து 84 நாள்கள் கடந்தவா்களுக்கு என பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 6,348 நபா்களுக்கும், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 3,921 நபா்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 5,816 நபா்களுக்கும், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 6,145 நபா்களுக்கும் என மொத்தம் 22,230 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட தோமினிக் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி

Our Facebook Page

Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, corona vaccines, special camps




%d bloggers like this: