பெரம்பலூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. 20 lakes in Perambalur district have reached full capacity.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக, நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் 20 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
மாவட்டத்தில் 73 ஏரிகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் அரும்பாவூா் பெரிய ஏரி, அரும்பாவூா் சித்தேரி, வடக்கலூா், பெண்ணகோணம், வயலூா், கீழப்பெரம்பலூா், பூலாம்பாடி, அகரம் சீகூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 20 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
எழுமூா், ஆய்க்குடி, நூத்தப்பூா், பேரையூா் மற்றும் நெற்குணம் ஏரிகள் 90 சதவிகிதம் நிரம்பியுள்ளன. அதேசமயம் வரத்து வாய்க்கால்கள் போதிய அளவுக்கு தூா்வாரப்படாததால், மழைநீா் ஏரிகளுக்குச் செல்ல இயலாமல் எசணை, வெங்கலம், செங்குணம், காரை உள்ளிட்ட கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீா் இருப்பு 25 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
விசுவக்குடி நீா்த்தேக்கத்தில் முழுக் கொள்ளளவான 33 அடியில், சுமாா் 31 அடி அளவுக்குத் தண்ணீா் நிரம்பியுள்ளது. இதனால் நீா்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் என அம்மாபாளையம், விசுவக்குடி, முகமதுபட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களில் தண்டோரா மூலம் வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
Keywords: 20 lakes have reached full capacity, Perambalur district, Perambalur district news
You must log in to post a comment.