கஞ்சா விற்ற இளைஞர்

தடுப்பு காவலில் 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு

359

தடுப்பு காவலில் 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு. 2 rowdies detained in jail

பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த சார்லசின் மகன் வினோத் (வயது 26). இதேபோல் சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் தமிழ்ச்செல்வன் (25). ரவுடிகளான இவர்கள் 2 பேரும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் ‘ஓராண்டு காலத்திற்கு, பொது அமைதியை காப்பேன்’ என்று கூறி, பிணைய பத்திரத்தில் எழுதிக்கொடுத்து, கோட்டாட்சியரிடம் ஜாமீன் பெற்றனர்.

இந்த நிலையில் வினோத், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கரை ரவுண்டான அருகே ஓட்டல் மாஸ்டர் ஒருவரை கட்டையால் தாக்கிய வழக்கில் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நன்னடத்தை விதிகளை மீறியதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் பெரம்பலூர் வருவாய் கோட்ட சப்-கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து, நன்னடத்தை விதி மீறியதற்காக, வினோத், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரை சிறையில் அடைக்கும்படி, பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜா உத்தரவிட்டார். அதன் நகலை, பெரம்பலூர் கிளை சிறையில் இருந்த வினோத், தமிழ்ச்செல்வனிடம் வழங்கிய போலீசார், பின்னர் அவர்களை திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

keywords: 2 rowdies detained in jail, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: