ரஞ்சன்குடி அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டைக்கு முயன்ற 2 பேர் கைது.

224

வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டைக்கு முயன்ற 2 பேர் கைது.

2 arrested for trying to hunt rabbit

வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி குகனேசன், வேப்பந்தட்டை வனவர் மாதேஸ்வரன் ஆகியோர் உத்தரவின்பேரில் வெண்பாவூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் முயல் வேட்டையாடுவதற்காக கன்னி வலை விரித்து வைத்து இருந்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கொட்டாரக்குன்று கிராமத்தை சேர்ந்த மோகன் (வயது 25), சிவா (33) என்பது தெரியவந்தது. முயலைப் பிடிக்க பயன்படுத்திய கன்னி வலையுடன் 2 பேரையும் போலீசார் கைது செய்து, வேப்பந்தட்டை வன அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: hunt rabbit, Rabbit, arrested
%d bloggers like this: