2 arrested for stealing bikes

மோட்டார் பைக்குகள் திருடிய 2 பேர் கைது.

214

மோட்டார் பைக்குகள் திருடிய 2 பேர் கைது.

2 arrested for stealing bikes

இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் கடந்த 20-ந்தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். பின்னர் அவர் மறுநாள் காலை வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது தொடர்பாக அருள்செல்வன் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின் பேரில், இருசக்கர வாகனங்களை திருடிய மர்மநபர்களை பிடிக்க பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குன்னம் தாலுகா பென்னக்கோணம் மேட்டுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்த் (வயது 23), திருமாந்துறை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முத்துக்குமார் (19) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து பெரம்பலூர், குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்த், முத்துக்குமாரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து அருள்செல்வனின் மோட்டார் சைக்கிள் உள்பட 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

தினத்தந்தி

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: 2 arrested for stealing bikes, Perambalur News




%d bloggers like this: