2.86 lakh passengers in a single day at Dubai airport
துபாய், அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விடுமுறையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கின்றனர். இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருகியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் இந்த விமான நிலையம் வழியாக 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.
கடந்த 12-ந்தேதி முதல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 8 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் சேவைகளை விரைவுபடுத்த அதிக அளவு ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை ‘செக் இன்’ செய்யும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. குடியிருப்பு விசா கொண்ட பயணிகள் எலெக்ட்ரானிக் கேட் மூலம் தங்கள் அமீரக அடையாள அட்டையை பயன்படுத்தி, இமிக்ரேசன் சோதனைகளை விரைவாக முடித்துக் கொள்கின்றனர்.
வழக்கத்தை விட சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால், சில பயணிகள் கூடுதல் நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பயணிகள் அதிகமாக வருவதால், அவர்களை வழியனுப்ப வந்தவர்கள், விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
விமான நிலைய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க பயணிகள் மெட்ரோ ரெயில் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஒரு பயணி, மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்துக்கு, மதியம் 12 மணிக்கே விமான நிலையத்துக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளிலும் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
Keywords: Dubai airport, Gulf Tamil News, UAE Tamil News, GCC Tamil News, Gulf News Tamil
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
அபுதாபியில் இந்திய மருத்துவரின் பெயரில் சாலைக்கு பெயர்
துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்