தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாள் மழை வாய்ப்பு

தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாள் மழை வாய்ப்பு


தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

“திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், காரைக்கால், புதுவை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை சின்னக்கல்லாறில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகும்”.
Leave a Reply

%d bloggers like this: