18.7 percent people was vaccinated

பெரம்பலூர் மாவட்டத்தில் 18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

182

பெரம்பலூர் மாவட்டத்தில் 18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.

18.7 percent people was vaccinated in Perambalur District.

பெரம்பலூர் மாவட்டத்தில் 18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களில் 4,035 பேரில், 3,411 பேருக்கு முதல் தவணையும், அதில் 2,472 பேருக்கு 2-வது தவணையும் என 84.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் 7,451 பேரில், 4,487 பேருக்கு முதல் தவணையும், அதில் 2,469 பேருக்கு 2-வது தவணையும் என 60.2 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1,71,120 பேரில், 39,043 பேருக்கு முதல் தவணையும், அதில் 8,533 பேருக்கு 2-வது தவணையும் என 22.8 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குள் உள்ள 2,82,407 பேரில், 37,939 பேருக்கு முதல் தவணையும், அதில் 125 பேருக்கு 2-வது தவணையும் என 13.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த மொத்தம் 4,53,527 பேரில், இதுவரைக்கும் 84,880 பேர் முதல் தவணையும், அதில், 13,599 பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Corona vaccine, 18.7 percent people




%d bloggers like this: