பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் 14 ஆடுகள் பலி.
14 goats killed in lightning strike
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு அண்ணா தெருவை சேர்ந்த சேகரின் மனைவி ஆறுமுகவள்ளி(வயது 30). இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறாா்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆறுமுகவள்ளி தனது ஆடுகளை குரும்பலூர், பாளையம் கிராமங்களுக்கு தெற்கே உள்ள பச்சை மலை தொடர்ச்சியான மொட்ட மலையடிவார தரிசு நிலங்களில் மாலை நேரத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் ஆடுகளுடன் வீடு திரும்பி விட்டார். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஆடுகளை மேய்க்க சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகவள்ளி முதல்நாள் ஆடு மேய்த்த இடத்திற்கே சென்று தேடி பார்த்துள்ளார். அப்போது, அங்கே மின்னல் தாக்கி பாறை ஒன்று இரண்டாக பிளந்து கிடந்ததும், அதனருகே மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் 4 வெள்ளாடுகள், 10 செம்மறியாடுகள் என மொத்தம் 14 ஆடுகள் அருகருகே செத்து கிடந்ததையும் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தாசில்தார் சின்னதுரை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் குரும்பலூர் கால்நடை மருத்துவர் மூக்கன் இறந்து கிடந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர், மலையடிவாரத்திலேயே பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி 14 ஆடுகளும் புதைக்கப்பட்டன.
தினத்தந்தி
Keywords: Perambalur district news, Perambalur news live, Perambalur Mavattam, Perambalur Seithigal, Today Perambalur News, Perambalur news today, Perambalur news daily, 14 goats killed, lightning strike
You must log in to post a comment.