பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 1,203 பேருக்கு கொரோனா தடுப்பூசி.
1,203 people were vaccinated against corona
நேற்று ஒரேநாளில் 1,203 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், முகாமில் கோவாக்சின் தடுப்பூசி மட்டும் போடப்பட்டது. அந்தவகையில் மாவட்டத்தில் 1,203 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இதில் பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 96 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 88,325 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 3,360 கோவாக்சின் தடுப்பூசியும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தினத்தந்தி
Keywords: 1203 people were vaccinated,
You must log in to post a comment.